மின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

0 278
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமணன். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்தில் லைன் மேனாக வேலை செய்து வருகிறார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பத்தில் ஏறி உள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின் இணைப்பு கொடுக்க சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Leave A Reply

Your email address will not be published.