குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

0 197
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், நவலூர் குட்பட்டு ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

  1. வண்ணாங்கோவில் மெயின்ரோடு பகுதியில் காவேரி குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று காவேரி குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. அதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வண்ணாங்கோவில் மெயின்ரோடு பகுதியில் காவேரி குடிநீர் இணைப்பு வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  1. வண்ணாங்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் குட்டப்பட்டு சந்திப்பு மற்றும் வண்ணாங்கோவில் பூங்குடி ரோடு சந்திப்பு பகுதிகளில் அதிகமாக விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. அவற்றிற்க்கு குறுகிய கால தீர்வாக இரு சந்திப்பு பகுதிகளிலும் காவல்துறை சார்பாக வேகத்தடுப்புகள் (பேரிகாட்ஸ்) மற்றும் வேகத்தடுப்பு சமிக்கைகள் (சிக்னல்ஸ்) அமைக்கவும் நீண்ட கால தீர்வாக தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் வண்ணாங்கோவில் பகுதியில் உயர்மட்ட பாலம் (VUP – Vehicle Under Pass ) அமைக்கவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வழியுறுத்தவும்.

Leave A Reply

Your email address will not be published.