உயிருக்கு போராடிய முதியவரை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியிலிருந்து உய்யங்கொண்டான் ஆற்றையொட்டியுள்ள சாலையில் கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி குழுமாயி அம்மன் திருக்கோவில் செல்லும் வழியில் மாநகராட்சி பூங்கா முன்பு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அரை நிர்வாணமாக எழ முடியாமல் மழையில் நனைந்து சாலையோரமாக சணல் சாக்கு பையினால் போற்றப்பட்டு முனகிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் பேட்ரால் ரோந்து வாகனத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் உயிருக்கு போராடுபவரை காக்க அவசர கால தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு சமூக ஆர்வலர் விஜயகுமார் தகவல் அளித்தார். ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவர்க்கு ஆடை அணிவித்து உதவி புரிந்தார். மீட்கப்பட்ட முதியவர் திருவானைக்காவல் என தகவல் தருகிறார். பாதிக்கப்பட்டவரை மீட்டெடுத்து தூக்கி 108 ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
