ஐம்பெரும் விழாவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி உரை : அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு
திருச்சி தெற்கு மாவட்டத்தில் ஐம்பெரும் விழா !கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகிறார் !
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக பொறுப்பாளருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை !
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 28 8 2022 அன்று மாலை 4 மணி அளவில் மணப்பாறை ஒன்றியம் உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில், ஐம்பெரும் விழாவில் கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கின்றார். மணப்பாறை ஒன்றிய திமுக அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா, கழகத் தலைவராக பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா . மணப்பாறையில் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.