பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை – சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
திருச்சி, பிப். 16 பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – பேரணி நடத்தி மரக்கன்றுகள் நடவு
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்காக வேளாண்மை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், பூவாளூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பேரணி நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் “சாலை விதிகளை கடைப்பிடிப்போம் – உயிரைக் காப்போம்”, “தலைக்கவசம் அணிவோம் – உயிர் பாதுகாப்போம்” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் முக்கியத்துவம், எதிர்கால தலைமுறைக்கான பசுமை வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், வேளாண்மையின் அடிப்படை அம்சங்கள், காய்கறி சாகுபடி முறைகள், விவசாயத்தின் சமூகப் பங்கு போன்றவை பற்றியும் மாணவர்கள் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களான
அஹமது இஸ்மாயில்.அ, அன்புசெல்வன்.நீ, அர்ச்சுதன்.பி, அருண்குமார்.அ, பாலாஜி.செ, தனுஷ்ராஜ்.ச, தரணி.தா, தருண்.தி, பிரான்சிஸ் சேவியர்.எ, கோகுல்.ஏ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்விற்கு செல்வி ரா. பிரியங்கா (உதவிப் பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் – வேளாண்மை விரிவாக்கத் துறை), மு. அப்துல் ரஹ்மான் (உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை),
சு. சுகுணா (உதவிப் பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – பயிர் நோயியல் துறை) ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர்.
பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ச. சுமதி தலைமையேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த முயற்சியின் மூலம் பள்ளி மாணவர்களிடையே வேளாண்மை குறித்த ஆர்வமும், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.