போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சி வந்தவர் கைது

0 565
Stalin trichy visit

ராமநாதபுரம் மாவட்டம் புதுமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு 62 இவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது பாஸ்போர்ட் துபாயில் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் போலியான முகவரி மற்றும் பெயரில் பாஸ்போர்ட் பெற்று துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

அவரை சோதனை செய்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலியான முகவரியில் வந்ததை அறிந்து அவரை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.