சென்னைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

0 216
Stalin trichy visit

திருச்சி, டிச. 7  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 363 தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த நிலையில் நேற்று (டிச.6)  ரூ. 25 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வாகன மூலம் மேயர் அன்பழகன் அனுப்பி வைத்தார்

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை துரிதப்படுத்த தமிழக முதல்வர் இன்று நேரில் ஆய்வு செய்து தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்றவும் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நிவாரண பணிக்காக விரைவாக முடிப்பதற்காகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் கடந்த 4ம் தேதி தூய்மை பணியாளர்கள் 300 பேர் மற்றும் 10 தூய்மைபணி மேற்பார்வையாளர்கள் 3 சுகாதார அலுவலர்கள் என 363
பேர் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் 5 பேருந்துகள் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் போர்வைகள் பிஸ்கட் பாக்கெட்டுகள் பிரட்,பாய், மருந்து பொருட்கள் குடிநீர் பாட்டில்கள் என ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்..

Leave A Reply

Your email address will not be published.