திருச்சிக்கு வருகைதரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 189
Stalin trichy visit

திருச்சி, செப். 16 திருச்சிக்கு வருகைதரும் முதலமைச்சருக்கு  தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென்று தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கழக முப்பெரும் விழாவிற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை (17/09/25 )  காலை 10.00 மணிக்கு திருச்சி வருகை தரும்  தமிழக முதல்வர் – கழகத் தலைவரை  விமான நிலையத்தில் வரவேற்பதற்கு கழக நிர்வாகிகள் அணி திரண்டு வருமாறு கேட்டுகொள்கிறேன் .

இந்தநிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.