தந்தை பெரியார் பிறந்தநாள் விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 168
Stalin trichy visit

திருச்சி, செப். 16 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி – தஞ்சை சாலை காட்டூரில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” திருவுருவச் சிலைக்கு நாளை (செப்.17)  காலை 9 மணிக்கு கழக நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்த உள்ளோம் .

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.