தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

0 214
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் உள்ள கபிரியேல்புரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாளாடி ஊராட்சியில் உள்ள கபிரியேல்புரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான அந்தோணிஜோசப். இவருடைய மனைவி  ஜெயராணி(51) . இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.ரயில் தண்டவாளத்திலிருந்து மிக அருகில் இவர்களது வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஜெயராணி ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத ரயில் ஜெயராணி மீது மோதியது. இதில் தாக்கம் வீசப்பட்ட ஜெயராணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் தனிப்பிரிவு காவலர் ராம்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த ஜெயராணி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.