மணிமேகலை சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
திருச்சி, அக்.16 திருச்சி மாவட்டம், துறையூர் பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரம் அருகே கிழக்குவாடியில் அமைந்துள்ள மணிமேகலை சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா கல்லூரி நிறுவனர் சீனிவாசன் மற்றும் கல்லூரி செயலர் மணிமேகலை ஆகியோர்களின் முன்னிலையில் கடைபிடிக்கப்பட்டது.
இந்த விழாவில் நாளிதழில் ஒன்றில் வெளிவந்த செய்தி கட்டுரையை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டு அதனை வாசிக்கச் சொல்லி முன்னாள் பாரத ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் எழுச்சியை மாணவிகள் தெரிந்து கொண்டனர்.
இந்நாளில் மாணவிகள் தாங்கள் உயர்க்கல்வி பயிலும் போது தங்களுடைய எழுச்சி எப்படி இருக்க வேண்டும் என்றும் இந்திய தேசத்திற்காக தங்களின் பங்களிப்பினை அனைவரும் அளிக்க வேண்டும் என்ற உரையினை எஸ் எம் கே மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ந சரவணன் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக திருமலை சீனிவாசா நர்சிங் கல்லூரி முதல்வர் மரகதம் மாணவிகளை வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் செல்வகுமார் இளையராஜா இளவரசன் செல்வம் செந்தில்குமார் சரண்யா ரேவதி ஐஸ்வர்யா சுகுணா ஆகியோர்கள் ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்கள் உலக தொழில்நுட்ப நாயகன் இளைஞர்களின் எழுச்சி வீரன் அப்துல் கலாம் பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். பி. எட் கல்லூரி முதல்வர் நடராஜன் நன்றியுரை வழங்கினார்.