குற்றவழக்கில் தலைமறைவான குற்றவாளி கோவையில் கைது
திருச்சி,டிச.18 திருவெறும்பூர் அருகே குற்ற வழக்கில் தலை மறைவாக இருந்த குற்றவாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் துவாக்குடி போலீசார் கோயம்புத்தூரில் வைத்து கைது செய்தனர்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி சசிகுமார் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சசிகுமாரை பிடிப்பதற்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் சசிகுமாரை தேடி வந்த நிலையில் கோயமுத்தூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் கோயம்புத்தூரில் வைத்து சசிகுமாரை கைது திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தினார்கள்
அதன் அடிப்படையில் நீதிபதி சசிகுமாரை 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கஉத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் சசிகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.