நாடு முழுவதும் இன்றைய கல்விசூழல் குறித்து மத்திய கல்வி அமைச்சரிடம் ABVPஅறிக்கை தாக்கல்

0 227
Stalin trichy visit

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
ABVP தேசிய மாணவர் அமைப்பின் அகில பாரத பொறுப்பாளர்கள் குழு நாடு முழுவதும் இன்றைய நிலையில் இருக்க கூடிய கல்வி சூழ்நிலை குறித்த அறிக்கையை ABVP-யின் அகில பாரத தலைவர் C.N.பட்டேல் அவர்கள் மற்றும் அகில பாரத பொதுச்செயலாளர் செல்வி. நிதி திரிபாதி அவர்களின் தலைமையில் மரியாதைக்குரிய மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ. தர்மேந்திரா பிரதான் அவர்களை சந்தித்து மனுவினை வழங்கினார். இச்சந்திப்பில் அகில பாரத செயலாளர் ஸ்ரீ. முத்துராமலிங்கம் உட்பட அகில பாரத பொறுப்பாளர்கள் குழு சந்தித்து நாடு முழுவதும் கல்வித்துறை சூழ்நிலை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தனர். மனுவில் தற்போது வரை நியமன செய்யப்படாத அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்க கூடிய ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சமர்ப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.