குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எடுத்தல் தொடர்பான குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி திருச்சி தில்லைநகர் கி ஆ பெ
மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்
வித்யாசந்துரு தலைமையில் 16.10.23 நடைபெற்றது.மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் வழங்கி குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 இன் கீழ் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, திருமண ஏற்பாடு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பது குறித்தும் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடைபெற்றால் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தொடர்பு கொண்டவர்களுடைய விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் விழிப்புணர்வு வழங்கினார்.
குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரிய வந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் எனது சுற்றுப்புறத்திலும் சமூகத்திலும் எந்த ஒரு குழந்தைக்கும் திருமணம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வேன் எனவும் மேலும் எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் உளமாற உறுதியளிக்கின்றேன் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.