நியாயவிலைக்கடைக்கு நிரந்தர கட்டடம் கோரி கையெழுத்து இயக்கம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரம் மணப்பாறைபட்டிரோடு 27 வது வார்டில் நியாயவிலை கடை அமராவதி – 3 வாடகை கட்டிடத்தில் இயங்கிவருகிறது. மேற்படி கடை அரசுக்கு சொந்தமான சர்வே எண்-733/2.நகர புல எண் 19/2 ல் இடத்தில் கட்டிடம் கட்டி நிரந்தரமான நியாய விலை கடை நடைமுறைக்கு கொண்டுவர கோரி CPI(ML) கட்சியின் சார்பாக கையெழுத்து இயக்கம் 27வது வார்டில் நகர செயலாளர் பி.பாலு தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் மெக் S.இளையராஜா முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S.ராஜ்குமார், நகரகுழு உறுப்பினர்கள் பங்கேற்பு.