எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, டிச.6 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து எய்ட்ஸ் கூட்டு மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறப்பான முறையில் இரத்ததான முகாம் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் லட்சுமி, மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் மணிவண்ணன், மாநகர் நல அலுவலர் மருத்துவர் சர்மிளி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்நுயிர் துறைத் தலைவர் மருத்துவர் ஞானகுரு, துணை இயக்குநர்(காசநோய்) மருத்துவர் சாவித்திரி, எச்.அய்.வியுடன் வாழ்வோர்க்கான கூட்டமைப்பு தலைவர் தமிழ் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.