அரசு பொது விடுமுறை நாளில் இயங்கி 92 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

0 331
Stalin trichy visit

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மை செயலாளருமான டாக்டர் அதுல்ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் ஆகியோர் அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 119 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 92 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்ப்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.