வேளாண்மை செயலி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

0 190
Stalin trichy visit

திருச்சி, செப். 7  வேளாண்மை செயலி குறித்து செயல் விளக்கம் அளித்த பல்கலைக்கழக வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மை செயலி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தகாந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை இறுதியாண்டு மாணவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியில் இளங்கலை வேளாண்மை பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் கு. சிவ அனவரதன், ம. தமிழ்முழக்கன், தி. கருப்பணன், மு ரூபன் மற்றும் ஐ.ஜெய்சன் ஐசக் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் விவசாயிகள் மற்றுமர பொதுமக்களுக்கு பல்வேறு வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளையும்,விழிப்புணர்வுகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமயங்குடி ஊராட்சியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக ,விவசாயிகளுக்கு M Velanmai (எம் வேளாண்மை) செயலி குறித்து விரிவாக செயல் விளக்கம் அளித்தனர் .
மேலும் ,இச்செயலியை குறித்த தகவல்கள், பயன்கள் ,பயன்படுத்தும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டி,விவசாயிகளுக்கு அவர்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.