விநாயகர் சதுர்த்தி : மநகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
திருச்சி, செப்.7 திருச்சி மாநகரத்தில் வருகின்ற 07.09.2024-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 09.09.2024-ம்தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்திட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று(06.09.2024)-ந்தேதி மாலை பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிரபாத் ரவுண்டானா (பழைய பிரபாத் தியோட்டர்) இருந்து கொடி அணிப்பு வகுப்பு தொடங்கி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சுமன்பஜார், காந்திமார்க்கெட் ஆர்ச் மற்றும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகடைவீதி வழியாக NSB ரோடு மலைக்கோட்டை வாசலில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.
இதில் காவல்துணை ஆணையர் வடக்கு, கூடுதல் துணை ஆணையர் (மாநகர ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.