திருச்சி ரைபிள் கிளப்பில் நடிகர் தல அஜித் : இலக்கினை நோக்கி சுட்டு அசத்தினார்!

0 374
Stalin trichy visit

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி. நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி தொடங்கிய போட்டிகள் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் 16 வயது சபியுத் 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர். 21ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார், தமிழ்ச்செல்வன் நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித திருச்சி வந்தார்.இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும். போட்டிகளில் கலந்து கொள்கிறார். இன்று காலை ரைபிள் கிளப்புக்கு வந்த அவர் சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டு இலக்கினை நோக்கி சுட்டார். அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் டைட் செக்யூரிட்டி பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உள்ளே யாரும் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.