திருச்சி ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு
திருச்சி, ஜுன் 22 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை (ஜூன் 12) முன்னிட்டு திருச்சி இரயில்வே ஜங்ஷனில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கடைகளில் ஆய்வு 22.06.23 நடத்தப்பட்டது.
தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தணிக்கையாளர் ரஞ்சித்குமார் கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெங்கடேசன் குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் மோகனசுந்தரி இரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் தேவேந்திரன் இரயில்வே சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் உமா சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி ஆகியோர் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள், பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கடைகளில் பணியில் உள்ளனரா என்பது குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
