கே.கே.நகர்- ஓலையூர் இடையே கூடுதல் பேருந்து சேவை தொடக்கம்

0 896
Stalin trichy visit

திருச்சி, நவ. 29 திருச்சி மாவட்ட ஓலையூர் சிப்பிநகர் குடியிருப்போர் சங்கத்தினர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டுமென திருச்சிக்கு நேற்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா புதிய பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் இன்று ஓலையூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற விழாவில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மணிகண்டம் ஒன்றியக்குழுத் தலைவர் கமலம்கருப்பையா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் சக்திவேல் மற்றம் போக்குவரத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.