தா.பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி

0 334
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பெரிய மாரியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன்  கிராம விநாயகர், அரசு வேம்பு, சந்தி கருப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. பிள்ளாதுரை பெரிய மாரியம்மன் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அழகுற காட்சி அளித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் செய்து  இளநீர் கண் திறந்து, பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்து வைக்கப்பட்டது. பக்தர்கள்  தேங்காய், பழம், மாவிளக்கு படைத்து சுவாமியை வழிபட்டனர். அப்போது மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பொதுமக்கள் நலமுடன் வாழவும்,
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும்,பிரார்த்தனை செய்யப்பட்டது.
விழாவின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.