ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாநகரம் பட்டவர்த்ரோடு ஆர் சி நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சகாயஜோனி தலைமையில் 12.08.22 நடைபெற்றது. குழந்தை நலக்குழு உறுப்பினர் மதிப்புறு முனைவர் பிரபு அவர்களின் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போதை பொருளினால் ஏற்படும் பிரச்சனைகள், உடல்,மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள், காவலன் செயலி, குழந்தை உரிமைகள், 1098 செயல்பாடு குறித்து பேசினார். Dr அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நிறுவனர் பக்கிரிசாமி, ஜான்சிராணி மகளிர் மன்றம் தலைவர் லதா ஆகியோர் குழந்தைகள் எதிர்கால நலன் குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
