கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு : அமைச்சர் சிவசங்கர்

0 182
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணியார்களின் ஓய்வறை, உணவகம், அலுவலகம், பேருந்து நிறுத்தும் இடம், பேருந்து பழுது நீக்கும் இடம், கழிவறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மேலும் உள்ள தேவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். தற்போது புயல் காரணமாக புயல் கரையை கடக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேருந்து சேவை இசிஆர் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் பேருந்து நிறுத்தம் செய்யப்படுள்ளது. மற்ற பகுதிகளில் அந்தந்த பகுதிகளில் காற்றின் வேகம் மற்றுமு; மழையை பொருந்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் இருக்கும் அதிகாரிகள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கவும், அரசின் சொத்தையும் பாதுக்காப்பது என்பதும் அரசின் கடமையாக உள்ளது அதனடிப்படையிலேயே பேருந்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதே போல் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் அரசு நகர பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம். இந்த சேவையின் மூலம் பயன்பெறும் பெண்களின் சதவீதம் 40 இருந்த நிலையில் தற்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறதே என்ற நிலையில்; வயிற்றெறிச்சலில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.