கிராமப்புற மதிப்பீடு மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 202
Stalin trichy visit

திருச்சி, டிச.27 நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்களால் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு (PRA) மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், திண்ணியம் கிராமத்தில் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்களால் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பி ஆர் ஏ என்பது ஒரு முறைமையாகும், இதில் கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வியல் ,சூழல், தேவைகள் ,வளங்கள் மற்றும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு திட்டமிட்டு செயல்படுவதில் உதவி செய்கிறது.

இதனை இயக்க வரைபடம் ( Mobility map), பிரச்சனை மரம் (Problem tree), தற்காலிக வரலாறு (Timeline), வட்டவிளக்கப்படம் (Pie chart), தரவரிசை முறை (Ranking method), சமுதாய வரைபடம் (Social map), வளங்கல் வரைபடம் (Resource map), தினசரி வேலை (Daily routine), நடைபயண வரைபடம் (Transact walk), பருவ கால வரைபடம் (Seasonal map) மற்றும் பரோட்டா விளக்கப்படம் (Impact diagram) மூலம் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் திண்ணியம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த பி ஆர் ஏ என்பது மக்களுக்கு உள்ளூர் வளங்கள் மற்றும் தேவைகளை அறிதல், திட்டமிடல் மற்றும் முடிவு எடுத்தல், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தல், மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், மக்களின் நம்பிக்கையை அதிகரித்தல், துல்லியமான தகவல், செலவு மற்றும் நேர குறைப்பு, உரிமை உணர்வு மற்றும் நிலையான தீர்வுகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கிறது.

இந்த விழிப்புணர்வை பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு மூலம் வினோத், சாம் குமார் சுரேந்தர், சந்தோஷ், சக்தி, ராஜேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் எடுத்து நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வானது நாளந்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர், முனைவர் ஜெ.வெங்கட பிரபு, முனைவர் பா. குணா இணை பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், திரு. ப.நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், திரு.ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடந்து முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.