பொன்மலைப்பட்டி அருகே வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிட கோரிக்கை

0 76
Stalin trichy visit

திருச்சி, பிப்.10 திருச்சி ஜெயில் கார்னிலிருந்து பொன்மலைப் பட்டி செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் இருந்தாலும், பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் மற்றும் கொசு பெருக்கம் ஏற்பட்டு பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து நிலவுகிறது.

மழைக்காலங்களில் பல இடங்களில் நீர் தேங்கி அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உருவாகும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் மேலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும்.
மேலும், பொதுமக்களும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மாற்று பொருட்களை (துணிப்பை, பாத்திரம்) பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் கோரிக்கை கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.