சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் பேரணி

0 297
Stalin trichy visit

இந்த 2023 ஆம் ஆண்டினை உலகச் சிறு தானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உலகத்தில் பல்வேறு நாடுகளில் சிறுதானிய உற்பத்தியைப் அதிகரிக்கவும், அதனைப் பற்றி அறிய வைக்கவும் ஏராளமான முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் மண்ணச்சநல்லூர் வேளாண் உழவர் மையம் முன்பு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை வேளாண்மைத் தொழில்நுட்பம் மேலான்மை முகமை அலுவலர் திரு. C. பூபதி அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொது மக்கள், சிறு தானியத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ள படாகைகள் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.