விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி
திருச்சி, ஆக. 15 விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலனை செய்யவேண்டும் – மணப்பாறையில் ஜி.கே.வாசன் பேட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் த.மா.க., வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரி மகனின் பிசியோ தெரபி மருத்துவமனையை த.மா.க மாநில தவைவர் ஜி.கே.வாசன் திறந்து வைக்க வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
தமிழகத்தில் தாற்போது உள்ள மிக முக்கியமான பிரச்சனை விவசாய பிரச்சனை. விவசாயிகளுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனையாகவும் உள்ளது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளார். ஆணையம் கூறியும் கூட கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்க வில்லை. சட்டரீதியாக அணுகுவதுதான் சரியான முறை என்று மேகதாது பிரச்சினையில் இன்று தமிழக அரசு அணுகியுள்ளது. நமக்கு நியாயம் கிடைக்கவேண்டும், உரிமை கிடைக்க வேண்டும் என முழுமையாக நம்புகிறேன். விவசாய கடன் தள்ளுபடி மிக அவசியமான ஒன்று அதனை விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள் அதனை அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன். மத்திய மாநில அரசுகள் இணைந்து பேசி வங்கிகளில் மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நேற்றைய தினம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 ஒப்பந்தங்கள் ரூ.67452 கோடிக்கு போடப்பட்டுள்ளன. அதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும் இதை காலக்கெடுவுக்குள் சரிவர செய்து முடிக்கவேண்டும் என்பது தமாகவின் வேண்டுகோள்.
காங்கிரஸ் கட்சியுடன் தமாக இணைப்பா என்ற கேள்விக்கு …., தமாக, இன்றைக்கு காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் தனித்தன்மையுடன், தமாகவின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறோம். உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்தும் பணியை துவங்கியுள்ளோம் என்றார்.
தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தில் பிரபலமானவர்கள், மரியாதைக்குறியவர்கள் இந்தியாவில் ஒரு உயர்ந்த பதவியை அடையவேண்டும் என்ற எண்ணம் தவறு என்று கூறமுடியாது. கட்சிக்கு அப்பாற்ப்பட்டு தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சட்டத்திற்கு முன் அனைவருக்கும் சமம் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார். நிகழ்வில் தமாக வினர் திரளாக கலந்து கொண்டனர்.