“ஸ்டிக்கர்” ஒட்டி அதிமுகவினர் பிரச்சாரம்

0 314
Stalin trichy visit

திருச்சி, ஜன.10  அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை வைத்து அதிமுகவினர் பல்வேறு விதமான அரசியல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘யார் அந்த சார்?’ என்று அனைத்து அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் மாணவர்கள் அமைப்பினர் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கர்’ பிரசாரத்தை, அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முழுவதும் அதிமுகவினர் யார்? அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் இன்று காலை திருச்சி தில்லை நகர் 7வது கிராஸ் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு நிர்வாகிகளின் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார்? அந்த சார்? என்கிற ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த பிரச்சாரத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, நிர்வாகி அப்துல் ரகுமான், பகுதி செயலாளர் ரோஜர், ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.