ஆங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

0 294
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதில் அதிமுக தேமுதிக. எஸ்டிபிஐ. புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர். இதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரமோகனை அறிவித்தனர்.

இந்நிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னால் எம்பியுமான ப.குமார் தலைமையில் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை, வட்டம், வார்டு கழக நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.