நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் தாலிசங்கிலியை பறித்தவர் கைது

0 247
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெ.2 கரியமாணிக்கத்தில் குழந்தைகளுடன் நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியரிடம் மோட்டார் பைக்கில் வந்த வாலிபர் 6  3/4 பவுன் தாலிச் செயினை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றதில் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

நெ 2 கரியமாணிக்கம் குடித்தருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி  சுமித்ரா(30). இவர் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மாலை பணிகளை முடித்துவிட்டு தனது குழந்தைகளுடன் நெ 2 கரியமாணிக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் வந்த வாலிபர் சுமித்ரா கழுத்தில் கிடந்த 6 3/4 பவுன் தாலிச் செயினை பறித்து விட்டு தப்பிக்க முயன்றார். அப்போது சுமித்ரா கூச்சம் இட்டதால் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து வாத்தலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதில் குற்றவாளிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வாத்தலை போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்ததில் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் குடித்தருவைச் சேர்ந்த 31 வயதான செல்வக்குமார் என தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும் ஆசிரியரிடம் பறித்த தாலிச் செயினை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.