அதிமுக வேட்பாளரை முற்றுகையிட்ட நிருவாகிகளால் பரபரப்பு
அதிமுக வேட்பாளரை சொந்த கட்சி நிர்வாகிகளே முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, ஏப். 16 திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி உட்பட்ட 24 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் ஆதரித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் வேட்பாளர் சந்திரமோகன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்பொழுது 18 வது வார்டில் பிரச்சாரத்திற்காக சென்ற பொழுது கட்சி நிர்வாகிகள் வழிமறித்து தங்கள்வார்டில் கிளை செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் கிளை செயளார் பெயரில் பல மோசடிகள் நடப்பதாகவும் நகர செயலாளர் தன்னிச்சையாக நடப்பதாகவும் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மறுத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் மீண்டும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது இதனால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டது..
இச் சம்பவத்தால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து வெற்றி வாய்ப்பு 50% இழந்துவிட்டதாகவும் கட்சியின் வேட்பாளர் வெற்றி வாய்ப்பு இழந்தால் அதற்கு காரணம் திறமை இல்லாத மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதிதான் என குற்றம் சாட்டி பேசிய சம்பவம் துறையூரில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..