திருச்சி எஸ்பி தனிப்பிரிவு போலீசார் 17 பேர் இடமாற்றம்!
திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளையும், சட்ட ஒழுங்கு பிரச்சனை எழும் சூழ்நிலையும் கண்காணித்து முன்கூட்டியே மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்க தனிப்பிரிவு இயங்கி வருகிறது.
இந்த பிரிவில் துவாக்குடி, நவல்பட்டு, வாத்தலை, காட்டுப்புத்தூர், முசிறி, புலிவலம், சோமரசம்பேட்டை, சமயபுரம், மண்ணச்சநல்லூர், கொள்ளிடம், மணிகண்டம், சமயபுரம், உப்பிலியபுரம், ஜெகநாதபுரம், தா.பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் உட்பட்டு பணிபுரிந்த 17 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உடனடியாக அங்கு பணியில் சேர திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.