எஸ்.ஐ.ஆர். பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு

0 194
Stalin trichy visit

திருச்சி, நவ.28  திருச்சி மாநகரில் SIR பணிகளில்  முறைகேடுகள்  நடப்பதாக கூறி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்

திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் SIR படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல்லாமல் பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். அதற்கு உடந்தையாக செயல்படும் BLO-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.