ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியாளர்கள் அவல நிலை : மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை வலியுறுத்தல்

0 127
Stalin trichy visit

திருச்சி, நவ.28  ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியாளர்கள் அவல நிலை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா???

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 4வது   வார்டு கவுன்சிலர் ஆண்டாள் ராம்குமார் இவர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவரது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பை கழிவுகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர் பாபுராஜ் தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் சாக்கடை கால்வாயில் இடுப்பளவுக்கு இறங்கி அங்கு உள்ள குப்பை கழிவுகளை எந்த ஒரு உபகரணமும் கையில் போடாமல் தங்கள் கைகளால் அல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..

உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எம் எல் ஏ மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஒப்பந்ததாரர் மற்றும் கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.