அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 150
Stalin trichy visit

திருச்சி, செப். 17  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு. திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர், சீனிவாசன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பாக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.