தந்தை பெரியார் சிலைக்கு துரை வைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை

0 270
Stalin trichy visit

திருச்சி, செப்.17  பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி – காட்டூரில் உள்ள தந்தைப் பெரியார்  சிலைக்கு துரை வைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து “மதவாதம் மாயட்டும் சாதியவாதம் தொலையட்டும் மனிதநேயம் பரவட்டும்” , அய்யா பெரியாரின் புகழ் ஓங்கிடவும்  முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்வில்  துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் இராமநாதன், மாநில விவசாய அணிச்செயலாளர் வாரணவாசி கி.இராசேந்திரன் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.