2026 -ல் அதிமுக ஆட்சி மலரும் : தமிழ் மகன் உசேன் பேச்சு
திருச்சி செப்.20- பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி எடத்தெரு அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன் தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர்கள் ரோஜர், சுரேஷ் குப்தா, அன்பழகன் ஏர்போர்ட் விஜி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், நிர்வாகிகள் கேசி பரமசிவம், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன்,பூபதி,புத்தூர் ராஜேந்திரன் ,எம் ஆர் ஆர் முஸ்தபா,நாகநாதர் பாண்டி,இலக்கிய அணி பாலாஜி,இன்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், வெங்கட் பிரபு, சகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை கழக பேச்சாளர் ஏழுமலை ஆகியோர் பேசினார்கள்.
மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் பேசுகையில்,‘‘திமுக ஒரு பொய் கூறி ஆட்சிக்கு வரவில்லை. திமுக தேர்தலின் போது சொன்னதெல்லாம் பொய் தான். சிறுபான்மையினருக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட 3 ஆண்டுகால ஆட்சியில் திமுக நிறைவேற்றவில்லை. எம்எல்ஏக்கள் சொல்வதை கூட அதிகாரிகள் கேட்பதில்லை என திருச்சி ஆளுங்கட்சி எம்எல்ஏவே கட்சிக்கூட்டத்தில் பேசும் அளவுக்கு தான் திமுக ஆட்சியின் நிலை உள்ளது. 2009ல் ஸ்டாலினை துணை முதல்வராக்கிய பிறகு தான், திமுக 10 ஆண்டுகள் ஆட்சிக்கே வர முடியவில்லை. அதுபோல இப்போது உதயநிதியை துணை முதல்வர் ஆக்க நினைக்கின்றனர். அதனால், 2026ல் திமுக ஆட்சிக்கு வராது, வரக்கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியை துாக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்’ என்றார்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேசுகையில்,‘‘அண்ணா வளர்த்த திமுக இப்போது இல்லை. அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடும் தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுக தான். ரம்ஜான் நோன்புக்கு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி, ஜெருசலம், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், உதவித்தொகை என சிறுபான்மையினருக்கான அடுக்கடுக்கான திட்டங்களை அள்ளித்தந்தது அதிமுக ஆட்சி தான். இதனை திமுகவில் உள்ள சிறுபான்மையினரே ஒப்புக்கொள்வார்கள். எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடவை சந்தித்திருந்தாலும், 2026ல் வெற்றி பெறும். அதிமுகவின்இரட்டை இலைக்கு ஓட்டளிக்க முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் காத்திருக்கின்றனர். அதனால், 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும்’ என்றார்.
கூட்டத்தில் திருச்சிமாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி,வரகனேரி சசிகுமார், நிர்வாகிகள ஆரி, பொம்மாசி பாலமுத்து, ரஜினிகாந்த், வாசுதேவன்,தர்கா காஜா, எடத்தெரு பாபு, ஆசைத்தம்பி, பாலக்கரை ரவீந்திரன்,பரத் குமார், நிர்வாகிகள் வசந்தம் செல்வமணி, மார்க்கெட் பிரகாஷ், பாலக்கரை ரவீந்திரன்,எனர்ஜி அப்துல் ரகுமான்,ஜெயக்குமார்,கண்ணன்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, வாழைக்க்காய் மண்டி சுரேஷ், ஐடி நாகராஜ், பீமநகர் சீனிவாசன், அம்மன் கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பன், காசிபாளையம் சுரேஷ்குமார், ஆவின் குணா, நாட்ஸ் சொக்கலிங்கம்,இன்ஜினியர் ரமேஷ்,கல்லுக்குழி முருகன், உடையான் பட்டி செல்வம், நத்தர்ஷா,சையது ரபி,டைமன் தாமோதரன் ,எடத்தெரு எம்.கே.குமார்,புது தெரு சரவணன் பிரகாஷ், நத்தர்ஷா,கட்பீஸ் ரமேஷ்,கயிலை கோபி,ஜோசப் செபா , ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.