மார்க்கெட் பகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

0 168
Stalin trichy visit

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக உறுப்பினர் சீட்டு வழங்குவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், மாநகர பகுதியில் ஆற்ற வேண்டிய மக்கள் பணிகள் குறித்து அதிமுக மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சந்தன மஹால் கூட்ட அரங்கில் இன்று நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறது எனவே வருகிற 2026 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மக்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட பேரவை செயலாளருமான கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன்,ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.