ஜெயலலிதா நினைவு நாள் : முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கை

0 1,050
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 2 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மாவின்  7-ஆம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற 5.12.2023 அன்று காலை 8.05 மணியளவில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில்அம்மாவின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்டபட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மாவின்  திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.