உச்சநீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 15 உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் – அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகள் வலியுறுத்தி நீதிமன்றம் வாயிலும் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நீதி துறையில் சுதந்திரம் பாதுகாப்பு பட வேண்டும், சமூகத்தை அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய நேர்மையான திறமையான நீதிபதிகள் வெளிப்படை தன்மையோடு நியமிக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் தென்னிந்தியாவில் அமைக்கப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவலக மொழியாக்க நடவடிக்க வேண்டும்,
வழக்கறிஞர்களுக்கான சேமநலநிதி 25 லட்சமாக உயர்த்த வேண்டும், பன்னாட்டு வழக்கறிஞர்கள் நிறுவனங்களில் இந்தியாவில் தொழில் செய்ய அனுமதி அளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூபாய் 5000 உதவித்தொகை உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும், தனியார் சட்டக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் நடைபெறும் கல்வி கடினக் கொள்கை தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த கோரிக்கைய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ராமச்சந்திரன், ஜார்ஜ் கவி, மெர்சி அலெக்ஸ், மோகன், பழனிவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.