அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட முகாம்

0 260
Stalin trichy visit

திருவாசியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து முனைப்பு இயக்க முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராம ஊராட்சியில் இன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து முனைப்பு இயக்க முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி மாவட்டம்மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநர் சாந்தி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்து திட்ட விளக்க உரை ஆற்றினார்.

வேளாண்மை உழவர் நலத் துறையில் நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி உரை ஆற்றினார்.

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தனபாக்கியம், ஊரக வளர்ச்சி துறை சார்பில் வெங்கடசுப்ரமணியன், வருவாய் துறை சார்பில் வெங்கடேஷ்
திருவாசி ஊராட்சி செயலர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் துறை சார்ந்த திட்டங்களை எடுத்து உரைத்தனர்.

மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா நன்றி உரை ஆற்றினார்.

முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.