புளியஞ்சோலையில் பொதுமக்களை மிரட்டி சுங்கவரி வசூலிப்பதாக குற்றச்சாட்டு

0 1,594
Stalin trichy visit

திருச்சி, பிப். 13 திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்க உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சப்பெருமாள்பட்டி பஞ்சாயத்து புளியஞ்சோலையில் வாகன சுங்கவரி என்ற பெயரில் அனைவரிடமும் உள்ளூர் மக்கள் உட்பட மிரட்டி பணம் கேட்கிறார்கள் என்றும், சுங்கவரி தருமாறு மிரட்டுகிறார்கள் என்று அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த குத்தகை ஏலம் எடுத்தவர் முருகப்பா என்ற நபர் ஆனால் பச்சப்பெருமாள் பட்டி துணைத்தலைவராக இருக்கக்கூடியவரின் குடும்பத்தினர் இந்த கட்டாய சுங்கவரி வசூலை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு தருவதுடன் தகாத வார்த்தைகளை கூறி மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புளியஞ்சோலைக்கு வரும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.