ஆதரவற்றோரின் உடலை அடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை செயல்பாட்டாளர்
திருச்சி மாநகராட்சி சின்னக்கடை வீதியில் உள்ள கருப்பசாமி கோவில் எதிரில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். பொதுமக்கள் உதவியுடன் திருச்சி மாநகர் கோட்டை காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி இறந்தார். மேற்கண்ட நபர் குறித்து சம்பவ இடத்தில் விசாரிக்கையில் இறந்த நபர் குடும்பம் ஏதும் இல்லாமல் அதே பகுதியில் பல ஆண்டுகளாக அனாதையாக பிச்சை எடுத்து சாப்பிட்டு பூட்டிய கடைகள் மற்றும் தெருவோரங்களில் படுத்துக்கொண்டு அனாதையாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர் இறந்தவருக்கு எந்த ஒரு உறவினர்களும் இல்லை என்றும் அவர் பல ஆண்டுகளாக அதே பகுதியில் அனாதையாக பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு பூட்டிய கடைகள் மற்றும் தெருவோரங்கள் படுத்துக் கொண்டு வாழ்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. மேற்கண்ட நபர் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதாலும் அந்நபரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்ய கோட்டை காவல் நிலைய காவலர் வினோத் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு கோட்டை காவல் நிலைய காவலர் வினோத் அளித்த தகவலின் அடிப்படையில் அவரின்
முன்னிலையில் குழுமிக்கரை மயானத்தில் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.
அனாதை பிணங்கள் நல்லடக்க உதவிக்கு
யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார்
98424 12247