அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள்
அதிமுக 52 வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, கட்சிக்கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாநகர கழகம் சார்பில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழகத்தலைவருமான எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.