தீ விபத்தில் ஒரு ஏக்கர் அளவிலான கரும்புகள் எரிந்து நாசம்

0 294
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சுமார் ஒரு ஏக்கர் அளவிலான கரும்பு தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட ராயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 7ஏக்கர் அளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்திருந்தார் இந்நிலையில் எதிர்பாராத விதமாக கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்துள்ளது .பிடித்த தீ மள மளவென எறிய தொடங்கியது. இதனை அப்பகுதியில் வேலை செய்தவர்கள் பார்த்து கரும்பு தோட்டம் முழுவதும் தீ பரவாமல் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அப்பகுதி விவசாயிகளின் துரித நூதன நடவடிக்கையால் அப்பகுதியில் பயரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் முழுவதும் தீயில் எரியாமல் தடுக்கப்பட்டது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் கரும்புத் தோட்டம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.