திருமழபாடி சாலையில் பழமையான புளிய மரம் காற்றில் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  புள்ளம்பாடி திருமழபாடி சாலை ஆலம்பாக்கம் அருகே சாலையில் இருந்த பழமையான புளியமரம் காற்றில் வேரோடு சாய்ந்து முறிந்தது.புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
லால்குடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் புள்ளம்பாடி திருமழபாடி சாலை ஆலப்பாக்கம் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் வீசிய பலத்த காற்றால் பழமையான புளியமரம் வேரோடு  சாய்ந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவ்வழியே சென்ற செம்பியங்குடியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் போபண்ணா தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பாரதி வீரர்கள்  ரமேஷ், பூமி ராஜன்,அமுதக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக  ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மரத்தை அகற்றும்  அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது

Leave A Reply

Your email address will not be published.