மணிகண்டம் அருகே அடையாளம் தெரியாத நபர் சாலை விபத்தில் உயிரிழப்பு

0 409
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய பகுதியான மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே மதுரை to திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பாலத்தில் நேற்று 01.05.2023 ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் சுமார் 45 வயது மதிக்க தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் திடிரென ரோட்டினை கடக்க முயன்ற போது அதே ரோட்டில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரினை ஒட்டி வந்த ஒசூரை சேர்ந்த ரவி மகன் சரவணமூர்த்தி (வயது 38/23) என்பவர் ஒட்டி வந்த காரானது மேற்படி நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகி மேற்படி பெயர்விலாசம் தெரியாத நபருக்கு தலையில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டவரை 108 ஆம்புலென்ஸ் மூலம் ‘திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர் இன்று 02.05.2023 அதிகாலை சுமார் 05.30 மணியளவில் இறந்தவரது பேரில் மணிகண்டம் கிராம நிர்வாக அலுவலர் திரு.சிலம்பரசன் (VAO) கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டம் காவல்நிலைய கு.எண் : 74/2023 U/S 279,304(A) IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேற்படி இறந்து போனவரது உடலானது திருச்சி அரசு மருத்துவமனை சவ கிடங்கில் பிண கூறாய்வு செய்வதற்காக கிடத்தப்பட்டுள்ளது.

இவரைப்பற்றி விவரம் தெரிந்தவர்கள் தகவல் அளிக்கலாம் என மணிகண்டம் காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.