அறிஞர் அண்ணா நினைவுநாள் : அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 282
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அந்த வகையில் திருச்சி திமுக மத்திய மாவட்ட மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கழக முதன்மை செயலாளர் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கும் கலைஞரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.